செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

யாழ் மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்டோருக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கல்

வடமாகாணத்திலுள்ள விசேடதேவைக்குட்பட்டவர்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்காக தலா ஒருவருக்கு ரூபா 122,000 வடக்கு மாகாண சுகாதார சுதேசவைத்திய மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அலகினூடாக வழங்கப்படவுள்ளது. இதன் முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20 நவம்பர் 2015 அன்று நடைபெற்றது.

இதன்போது அமைச்சர்  வைத்தியகலாநிதி  ப.சத்தியலிங்கம் அவர்களால் பருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய், சாவகச்சேரி, தெல்லிப்பளை, நல்லூர் மற்றும் வேலனை பிரதேசசெயலகங்களிற்குட்பட்ட 35 பயனாளிக்கான முதற்கட்ட கொடுப்பனவாக 30,000 ரூபாவுக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான க.தர்மலிங்கம், ப.கஐதீபன், அ.பரஞ்சோதி, கோப்பாய் பிரதேசசெயலாளர் பிரதீபன், வடமாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் திருமதி.சி.சுஜீவா, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி.இ. நளாயினி, அமைச்சு பிரதம கணக்காளர் க.சி.கஜேந்திரன்,  கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

  width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500