பிரதம செயலாளர் செயலகம்

மாகாண உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது

வடமாகாண உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் மன்னார் மாவட்டத்திற்கான உப அலுவலகம் மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக வளாகத்தினுள் புதிததாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் 23 நவம்பர் 2015 முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இக்கட்டடத்தினை வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் ஆர்.எஸ். துரைராஜா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வைபவரீதியாக திறந்து வைத்து கடமைகளை ஆரம்பித்து வைத்தார். மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துறம் அவர்கள் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். 

தொடர்ந்து பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம் மற்றும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் இருவரினதும் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாகாணக் கணக்காய்வுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500