Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
உலக வங்கிக் குழுவினர் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

உள்ளூராட்சி அமைச்சு

உலக வங்கிக் குழுவினர் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

உலக வங்கி நிதியுதவியுடன் இலங்கை தந்ரோபாய நகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கண்டி மற்றும் காலி நகர்களில் இடம்பெற்றுவரும் நகர அபிவிருத்தி திட்டம் போன்று யாழ்ப்பாணத்திலும் தெரிவு செய்யப்பட்ட நகர சேவைகள் மற்றும் பொது நகர இடங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

யாழ் நகர அபிவிருத்திக் செயற்திட்டத்தின் நோக்கமானது யாழ் நகர பிரதேசத்தை தந்ரோபாய சிந்தனை, திட்டமிடல் மற்றும் விரைவான சிறந்த முடிவுகளை அடைவதன் மூலம் யாழ்ப்பாண நகரை மீளக் கட்டியெழுப்புவதுடன் எதிர்கால முதலீடுகளுக்கும் வழிவகைகள் செய்தலாகும்.

இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் தயாரிப்புப் பணிக்குழுவின் தலைவர் மற்றும் ஆலோசகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து முதலசை்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை 25 நவம்பர் 2015 அன்று முதலமைச்சர் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர். மேலும் இக்குழுவினர் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டு நகர்ப்புற வடிவமைப்பு, கலாச்சார பாரம்பரியம், நிலக்கீழ் நீர், குளங்கள், வீதிகள், பொதுசன போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக ஆராய்ந்தனர். உலக வங்கியின் சபையின் அங்கிகாரம் மே 2016 இல் கிடைக்கப்பெற்றதும் யாழ் நகர அபிவிருத்தித்திட்டம் அமுல்படுத்தப்படும்.  இச்செயற்திட்டமானது மே 2016 தொடக்கம் டிசெம்பர் 2021 வரையான காலப்பகுதியினுள் செயற்படுத்தப்படவுள்ளது.  

இக்கலந்துரையாடலில் பிரதிப் பிரதம செயலாளர் – (நிதி) பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் முதலமைச்சர் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  

 width=500

 width=500