Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
முல்லைத்தீவில் மக்களுக்கான குறை நிவர்த்தி நடமாடும் சேவை

முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முல்லைத்தீவில் மக்களுக்கான குறை நிவர்த்தி நடமாடும் சேவை

வடக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் வடக்கு மாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மக்கள் குறைநிவர்த்தி நடமாடும் சேவையானது 01 டிசெம்பர் 2015 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நடமாடும் சேவையினை வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். அதே தினம்  முதலமைச்சரினால் பாடசாலையில் தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கென அமைக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்கென கையளிக்கப்பட்டது. இதன் போது பெற்றோரை இழந்த சுமார் 50 பாடசாலை மாணவர்களுக்கு UNICEF மற்றும் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் ரூபா 500.00 பெறுமதியான காசோலை மற்றும் பாடசாலை உபகரணங்களும் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன. அத்துடன் மாகாண காணி நிர்வாக திணைக்களத்தின் அனுசரணையில் முதலமைச்சர் அவர்களால் இலவசமாக மாங்கன்றுகளும் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபையின்  அமைச்சர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாண சபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முதலமைச்சரின் செயலாளர் மற்றும் வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அலுவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

வட மாகாண சபையின் முதலமைச்சரால், நடமாடும் சேவையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தம்மால் இயன்றவற்றிற்கு உடனடித் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. 

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500