சுகாதார அமைச்சு

நத்தார் நல்வாழ்த்துக்கள் – வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், புனர்வாழ்வு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகாரம் அமைச்சு

இந்நன்னாளில் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலரவிருக்கும் புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் சந்தோசமானதுமான சுபீட்சத்தை வாரி வழங்க வேண்டும். அத்தோடு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சகல செயற்பாடுகளையும் இலக்குகளையும் அடைவதற்கு எம்மை முழுமனதாக அர்ப்பணித்து அவற்றை திருப்திகரமாக நிறைவேற்றுவதற்காக குழுவாக செயற்பட்டு எமது கடமைகளை நிறைவேற்றுவோம்.

வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், புனர்வாழ்வு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகாரம் துறைகளின் இலக்குகளை சிறப்பாக அடைவதற்காக உன்னத பணிபுரிவோம்.

மலரவிருக்கும் புத்தாண்டு ஆரோக்கியமானதாகவும் பிரகாசமானதாகவும் அமையட்டும்.