பிரதம செயலாளர் செயலகம்

முகாமைத்துவ பயிற்சி அலகின் 2016ம் ஆண்டிற்கான திட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை

முகாமைத்துவ பயிற்சி அலகினால் அதன் தற்போதைய நிலை மற்றும் நிறுவனத்தின் அபிவிருத்தி தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று 30 டிசெம்பர் 2015 அன்று மாலை 3.30 மணியளவில் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 

இதில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத்தின் தலைவர்கள் மற்றும் முகாமைத்துவ பயிற்சி அலகின் வளவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து முகாமைத்துவ பயிற்சி அலகின் பணிப்பாளர் க.சிவகரன் அவர்களின் முகாமைத்துவ அலகின் தற்போதைய நிலையும் 2016ம் ஆண்டிற்கான பயிற்சித் திட்டங்களை தயாரித்தல் தொடர்பாக விளக்கவுரையும் இடம்பெற்றது.  

இப்பயிற்சிப்பட்டறையை நடாத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை ஏ.சிவபாலசுந்தரன், பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி அவர்கள் மேற்கொண்டிருந்தார்.  

இப்பயிற்சிப்பட்டறையானது முகாமைத்துவ பயிற்சி அலகின் 2016ம் ஆண்டிற்கான செயற்பாடுகளை திட்டமிடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன் இதன்போது பங்குபற்றுனர்களால் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500