சுகாதார அமைச்சு

விளையாட்டு மற்றும் ஆரோக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு நடைபவனி

சனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய தேசிய விளையாட்டுத்துறை அமைச்சினால் 2016 ஜனவரி 25ம் திகதியிலிருந்து 30ம் திகதி வரைக்கும் விளையாட்டு, உடல் நல மேம்பாடு தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது,

விளையாட்டு, உடல் நல மேம்பாடு தேசிய வாரத்தை மன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தினால் 27.01.2016 திகதி காலை 7.00 மணிக்கு  ஆரோக்கியமான வாழ்வு என்னும் தொனிப் பொருளில் நடைபவனி நடைபெற்றது

இந் நிகழ்வில், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ் பளிஹக்கார , ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், கல்விப்பண்பாட்டு அலுவலர்கள் அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன், கால்நடை அபிவிருத்தி  திணைக்கள பணிப்பாளர், சுகாதார அமைச்சின் உதவி செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதாரதுறை உத்தியோகத்தர்கள் பிரமுகர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். இந்த நடைபவனி யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்பாக ஆரம்பமாகி கே.கேஸ் வீதி, ஸ்ரான்லி வீதி, பருத்தித்துறை வீதி, வேம்படி வீதி ஊடாக யாழ் மத்திய கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது.

மேலும் இந் நிகழ்வில்,இறுதியாக  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் துறைசார் நிபுணர்களினால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு பற்றிய கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றது.