சுகாதார அமைச்சு

மாகாண ஆரோக்கிய விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஆரோக்கிய நடைபவனி

வடமாகாண சுகாதார அமைச்சும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சமுதாய, குடும்ப  மருத்துவத்துறையும்  மருத்துவபீடமும் இணைந்து மாகாண ஆரோக்கிய விழாவின் ஓர் அங்கமான தொற்றாநோய்கள் தொடர்பான  விழிப்புணர்வு ஆரோக்கிய நடைபவனியை ஒழுங்கு செய்திருந்தன. இந் நடைபவனியானது 15 பெப்ரவரி 2016 அன்று காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்த நடைபவனி பண்ணையில் வடமாகாண சுகாதார அமைச்சு வளாகத்தில் ஆரம்பித்து யாழ்நகர் ஊடாக பலாலி வீதி வழியாக சென்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தை அடைந்தது.

இதில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், திணைக்கள அலுவலர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர், மருத்துவபீட விரிவுரையாளர்கள், மருத்துவபீட மாணவர்கள், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500