செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

நலிவுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய செயற்பாடுகளை இனம் காணலும் ஆவணப்படுத்தலுக்குமான செயலமர்வு

வடமாகாண முதலமைச்சரினதும் மற்றும் சுகாதார அமைச்சரினதும் ஆலோசனைக்கமைய, வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் வாழும் நலிவுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளை பகுப்பாய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் வடமாகாண சுகாதார, சுதேச  மருத்துவ, சமூகசேவைகளும் புனர்வாழ்வும், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் மகளிர் விவகார பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன் முதலாம் கட்ட செயலமர்வு 16.02.2016 திகதியன்று வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

சுகாதார அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில்  சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

இச்செயலமர்வு தொடர்ச்சியாக வடமாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது.

அனைத்து மாவட்ட செயலமர்வுகளினதும் முடிவில் மாகாண மட்ட செயலமர்வு நிகழ்வு எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை வடமாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது.

  

 width=500

 width=500

 width=500

 width=500