செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

சர்வதேச மகளிர்தின விழா கொண்டாடப்பட்டது

வடமாகாண சுகாதார அமைச்சின் மகளிர் விவகார பிரிவினால் சர்வதேச மகளிர்தின விழா 09 மார்ச் 2016 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

'நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள்' என்னும் தொனிப் பொருளில் சுகாதார அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் வடமாகாண சுகாதார மற்றும் மகளிர் விவகார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணத்தின் இந்தியத் துணைத்தூதுவர் திரு. அ. நடராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வில் 'நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள்' என்ற தலைப்பில் திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களினாலும் 'மீண்டெழும் காலத்தில் பெண்கள் உரிமைகளும் சவால்களும்' என்ற தலைப்பில் பெண் உரிமைச் செயற்பாட்டாளர் திருமதி. பி.எஸ்.அஜீதா அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

வடமாகாணத்தின் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளை இனங்காணுதலும் ஆவணப்படுத்தலும் தொடர்பான காட்சியளிப்பும் விளக்கமும் திரு.பொன்.சிங்கம் அவர்களினால் அளிக்கப்பட்டது.

அத்துடன் சுகாதார அமைச்சின் மகளிர் விவகார பிரிவினால் திறந்த போட்டி அடிப்படையில் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான சமூகப் பிரச்சனைஇ விதவைகள் தொடர்பான சமூகப் பார்வையும் மற்றும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய குறுந்திரைப்படங்கள் கோரப்பட்டு அவற்றில் சாந்தி , அவஸ்தை, வினவு ஆகிய குறும்திரைப்படங்களின் இறுவெட்டுக்கள் திரையிடப்பட்டு வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

மேலும் சுகாதார அமைச்சும் யாழ் பல்கலைக்கழக செயற்திறன் அரங்கும் இணைந்து சமூக வலைத்தளங்களின் பாவனையினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இளவயதுக் கர்ப்பமும் போதைவஸ்து, மதுபாவனை குத்தகை மற்றும் வாடகை கொடுப்பனவுகள் தொடர்பில் குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புக்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட வடு, காவு, கெடு ஆகிய 3 திரைப்படங்களின் இறுவெட்டுக்களும் வெளியிடப்பட்டன. 

 width=500

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500