செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

மீன்பிடி அமைச்சின் மன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் 27 மே 2016 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் அபிவிருத்தித் திட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இக் கலந்துரையாடலில் குறிப்பாக அமைச்சரின் 2016ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடை (CBG) நிதியின் கீழ் இடம்பெறவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது இவ்வேலைத்திட்டங்கள் யாவற்றையும் இரண்டு மாத காலத்தினுள் நிறைவு செய்யுமாறு அமைச்சரினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்,  அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அமைச்சின் பிரதம கணக்காளர்,  வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள மன்னார் வவுனியா பிரதம பொறியியலாளர், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர்,  அமைச்சின் உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களின் பிரதிநிதிகள், இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகிய தெரிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்பினரும் கலந்து கொண்டனர்.