chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

iRoad திட்டம் தொடர்பாக வடக்கு மாகாண சபைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையேயான பரஸ்பர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் வீதிக்கான ஒருங்கிணைந்த முதலீட்டு திட்டம் (iRoad) தொடர்பாக வடக்கு மாகாண சபைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையேயான பரஸ்பர ஒப்பந்தம்  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.ஆர்.சூரியாராச்சி மற்றும் வடக்கு மாகாண சபை சார்பாக  வட மாகாண சபையின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரிற்கிடையே 15 யூன் 2016 அன்று பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபற்றது. 

வீதிக்கான ஒருங்கிணைந்த முதலீட்டு திட்டத்தின் பணிப்பாளர் ஜெனிபா வீரக்கோன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாணத்திற்கான பணிப்பாளர் ஜி.ஜே.டி.குரூஸ், வட மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.