செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

விசேடதேவையுடையோரின் புள்ளிவிபரங்களை சேகரித்த உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர்கள் மற்றும் விசேடவகைக்குட்பட்ட பெண்கள் தொடர்பான முதலாம் கட்டமாக புள்ளி விபரங்களை சேகரித்து தந்துதவிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக 19.05.2016 திகதி காலை 10 மணியளவில் கிளிநொச்சி பிராந்தியசுகாதாரசேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாண சுகாதாரஅமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம்,  சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், ஆசிய மன்ற பிரதி குழுத்தலைவர், வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறைசார் உத்தியோகத்தர்கள் எனகலந்துகொண்டனர்.
நிகழ்விலே ஆய்வின் புள்ளி விபரங்களை சேகரித்த உத்தியோகத்தர்களின் சேவையை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.