சுகாதார அமைச்சு

சர்வதேச யோகா தின நிகழ்வு 2016

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 21.06.2016 அன்று காலை 8.15 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சின் முன்றலில் வடமாகாண சுதேசமருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி சி.துரைரட்ணம் தலைமையில் சூரியநமஸ்கார யோகா பயிற்சி நடைபெற்றது.

இவ் நிகழ்வில் வடமாகாண சுகாதாரத்துறை அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.