விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் ஆலயங்களுக்கான உதவித்திட்டத்தை வழங்கி வைத்தார்

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியிலிருந்து மன்னார் மாவட்டத்தின் மாவிலங்கேணி புனித அடைக்கலமாதா ஆலயம் மற்றும் முருங்கன் மெதடிஸ்த திருச்சபை ஆகியவற்றுக்கு அவர்களது தேவைகளின் அடிப்படையில்  ஆலய புனரமைப்பு பணிகளுக்காக தலா 50,000.00 ரூபாவிற்கான காசோலைகளை 07 நவம்பர் 2016 அன்று  மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து  வழங்கப்பட்டது.