விவசாய அமைச்சு

தேவைகளை உடையவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன

மிகவும் தேவைகளை உடைய மக்களுக்கு தம்மால் ஆன உதவிகளை வழங்கும் நோக்கோடு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனையுடைய முன்னாள் போராளி ஒருவரது பாடசாலை செல்லும் மகளுக்கு துவிச்சக்கர வண்டியும்,

பாலியாறு பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட குடும்பத்தின் வறுமை நிலையைக் கருத்திற் கொண்டு அவரது மகள் பாடசாலை செல்வதற்காக துவிச்சக்கர வண்டியும்,  மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தனது அன்றாட வேலைக்கு செல்வதற்காகவுமென துவிச்சக்கர வண்டியுமாக மொத்தம் 03 துவிச்சக்கர வண்டிகளை 17 நவம்பர் 2016 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து அமைச்சர் வழங்கி வைத்தார்.