விவசாய அமைச்சு

தேசிய மட்ட கபடி சாதனையாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது

மன்னார் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் நோக்கோடான செயற்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் தேசிய மட்ட கபடி சாதனையாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

அமைச்சர் அவர்களது 2016ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியில் இருந்து மன்னார் கட்டையடம்பன் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் கபடி அணியினருக்கு அவர்களது தேசிய மட்ட சாதனையை பாராட்டி அவர்களுக்கான கபடி சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான காசோலையினை 12 நவம்பர் 2016 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து அமைச்சர் அவர்களால் கல்லூரியின் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.