சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சின் சிற்றிதழ் வெளியிடப்பட்டது

வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சு தமது செயற்பாடுகளின் விவரணம் அடங்கிய செய்தி மடலான சிற்றிதழினை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் 23.11.2016 அன்று சுகாதார அமைச்சர் அவர்களினால் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களிடம் கையளித்து வெளியீடு செய்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடமாகாண திணைக்களத் தலைவர்களும் அமைச்சின் உத்தியோகத்தர்களும் பங்குகொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தனர்.