விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரால் வீட்டுப் புனரமைப்பிற்கு உதவி வழங்கப்பட்டது

மன்னார் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட, பனங்கட்டுக்கொட்டு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த, கடந்த யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி செல்வி. ஆதிரியான்பிள்ளை யோகேந்திரனுக்கு அவரது வீட்டினைப் புனரமைப்பதற்கென வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் 

தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியின் கீழ் 15 சீமெந்துப் பக்கெற்றுகள் வழங்கப்பட்டன. மேலும் அமைச்சர் 22 நவம்பர் 2016 அன்று குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று புனர்நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்டார்.