விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரால் வடமாகாண கபடி போட்டிக்கு வெற்றிக் கிண்ணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன

மன்னார் பெரிய கமம் எவகிரீன் விளையாட்டுக்கழகம் நடத்தவுள்ள வடமாகாணம் தழுவியதான கழகங்களுக்கு இடையிலான கபடிச் சுற்றுப் போட்டிக்கு வழங்கப்படவுள்ள வெற்றிக்கேடயங்களை வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் கழகத்தின் பிரதிநிதிகளிடம் கையளித்துவைத்தார்.

அமைச்சர் தனது 2016ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியிலிருந்து குறித்த சுற்றுப் போட்டிக்கான முதல் மூன்று மற்றும் விசேட வெற்றிக்கிண்ணங்களை கொள்வனவு செய்து குறித்த கழகத்தின் பிரதிநிதிகளிடம் கையளிக்கும் நிகழ்வு 25 நவம்பர் 2016 அன்று அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது.