முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

வருமான பரிசோதகர், ஆய்வு உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்கள் சிலவற்றில் காணப்பட்ட சில பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற நேர்முகத் தேர்வு என்பவற்றுக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 12 டிசெம்பர் 2016 அன்று முதலமைச்சரின் அமைச்சில் நடைபெற்றது.

இந்நியமனக் கடிதங்களை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர், உள்ளுராட்சி ஆணையாளர், தொழிற் துறைத் திணைக்களப் பணிப்பாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர், காணி ஆணையாளர், அமைச்சின் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவிச் செயலாளர், ஐந்து மாவட்டங்களினதும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 width=500

 width=500

 width=500