முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சர் அவர்களால் புதிய வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது

வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டிற்கான வீடமைப்புத் திட்ட நிதியில் யாழ்ப்பாணம் கைதடி மத்தியில் புதிதாக கட்டப்பட்ட வீடு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் இன்று 14.12.2016ம் திகதி சுபவேளையில் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டிலும் வீடமைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்படுகின்ற குறைந்தளவு நிதியில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் மத்திய அரசின் வீடமைப்புத்திட்டங்களில் உள்ளடக்கப்படாது விடப்பட்டு வீடு அவசியம் தேவையாக உள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. 

அவ்வாறே இவ்வாண்டிலும் யாழ் மாவட்டத்தில் 6 வீடுகள், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 வீடுகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 வீடுகள் மற்றும் மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு தலா 2 வீடுகளுமாக மொத்தமாக 17 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. அமைச்சின் நிதி 750,000.00 ரூபாவும் பயனாளியின் பங்களிப்பு தொகை 155,000.00 ரூபாவுமாக மொத்தமாக ஒவ்வொரு வீடும் 905,000.00 ரூபா பெறுமதியில் அமைக்கப்படுகின்றது. 

 width=500

 width=500

 width=500