விவசாய அமைச்சு

மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்களால் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

மன்னார் மாவட்டத்தில் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் திறமையினை மேலும் ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு 11 டிசெம்பர் 2016 அன்றுமன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுலகத்தில் இடம்பெற்றது. குறித்த ஊக்குவிப்புத்திட்டமானது அமைச்சரின் 2016ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் விசேட சித்தியைப் பெற்ற மாணவிக்கு அவரது பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கு தேவையான மடிக்கணணி வழங்கி வைக்கப்பட்டதுடன் முதல் முறையாக ஜோசப் மாஸ்டர் ஆங்கில மொழி பாடசாலையில் இருந்து தமது 5ம் தரத்தினை நிறைவு செய்து வேறு பாடசாலைகளில் கல்வியை தொடரும் மாணவர்கள் 6 பேருக்கு தலா ரூபா 10,000 பெறுமதியான கணணி மேசை, துவிச்சக்கர வண்டி போன்ற பொருட்கள் அவர்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டன.