விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்களால்; வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது

அடம்பன் புனித வியாகுல மாதா ஆலய மேய்ப்புப் பணிச் சபையின் கோரிக்கைக்கமைவாக குறித்த கிராமத்திலுள்ள மிகவும் வறிய 50 மாணவர்களது கல்வி நடவடிக்கைகளுக்காக வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான (CBG) நிதியிலிருந்து 200 பாடசாலை அப்பியாசக் கொப்பிகளை 11 டிசெம்பர் 2016 அன்று மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து ஆலய சபையின் பிரதிநிதியிடம் வழங்கி வைத்தார்.