முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

நெடுந்தீவிற்கான நெடுந்தாரகையின் முதற்பயணம்

நீண்ட காலமாக நிலவி வந்த நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் வட மாகாண சபையின் முதலமைச்சர் அவர்களினது கோரிக்கையின் அடிப்படையில் வட மாகாண சபையின் அனைத்து தரப்பினரதும் முயற்சியின் பயனாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வட மாகாண சபையின் வழிகாட்டலில் உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியான சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வட மாகாண முதலமைச்சர் அவர்களால் நெடுந்தாரகை என பெயர் சூட்டப்பட்ட கப்பல் நெடுந்தீவு பிரதேச சபையிடம் கையளிக்கும் கால்கோள் விழா குறிகட்டுவான் இறங்கு துறையில் 20 ஜனவரி 2017 அன்று நடைபெற்றது.

அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேன்மை தங்கிய பிரைஸ் ஹட்செசன் முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி மன்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோரால் படகுச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாரளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர்கள் வட மாகாண சபையின்  பிரதம செயலாளர் அ.பத்திநாதன், உலக வங்கியின் இலங்கைக்கான இணைப்பாளர் எந்திரி.மனோகரன், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன், மத்திய அரசின் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் உயர் அதிகாரிகள், வட மாகாண சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.