விவசாய அமைச்சு

நீண்டநாள் பாடசாலை சமூகத்தின் தேவை நிவர்த்தி செய்யப்பட்டது

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம  அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களால்  சின்னவலயன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு  நிழல் பிரதியிடும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

 

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எல்லைக்கிராமமாக காணப்படும் சின்னவலயன்கட்டு கிராமத்தில் அமைந்துள்ள மடு கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலையில் பலதேவைகள் இருந்தபோதும் மிகவும் அவசியமானதாக கருதப்படும் நிழல் பிரதியிடும் இயந்திரத்தின் தேவையை வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதற்கு அமைவாக அமைச்சர் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து (CBG) நிழல் பிரதியிடும் இயந்திரத்தை பெற்று குறித்த பாடசாலையின் அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வு குறித்த பாடசாலையில் 17.01.2017 அன்று நடைபெற்றது.குறித்த நிகழ்வில் மடு கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்டஸ், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.