உள்ளூராட்சி அமைச்சு

கசூரினா சுற்றுலா மையத்திற்கான மேலதிக அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூ.2.35 மில்லியன் செலவில் முதலமைச்சரின் அமைச்சின் சுற்றுலாத் துறையின் கீழ் கசூரினா சுற்றுலா மையத்திற்கான மேலதிக அடிப்படை வசதிகள் 2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவ் வேலைத்திட்டத்தினை மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 05 பெப்ரவரி 2017 அன்று நடைபெற்றது. இதில்  முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு மக்களிடம் இத்திட்டத்தினைக் கையளித்தார்.

காரைநகர் பிரதேசசபையின் செயலாளர் திருமதி.சா.உருத்திரசாம்பவன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் வடமாகாணசபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர், அமைச்சின் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500