உள்ளூராட்சி அமைச்சு

மானிப்பாய் பிரதேச சபையின் புதிய சந்தைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் என்பவற்றின் நிதி உதவியுடன் ரூ.8.55 மில்லியன் செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் மானிப்பாய்  பிரதேச சபையில் அமைக்கப்பட்ட புதிய சந்தைக் கட்டடம் 05 பெப்ரவரி 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அவரும் ஏனைய விருந்தினர்களும் பாரம்பரிய இசைவாத்தியங்களின் இசையுடன் அழைத்துவரப்பட்டனர். மானிப்பாய் பிரதேசசபையின் செயலாளர் திரு குணசிங்கம் சற்குணராசா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் பொ.குகநாதன், முதலமைச்சின் அமைச்சின் பிரதம கணக்காளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500