உள்ளூராட்சி அமைச்சு

மேம்படுத்தப்பட்ட வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூ.2.73 மில்லியன் செலவில் முதலமைச்சரின் அமைச்சின் சுற்றுலாத் துறையின் கீழ் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைக்கான மேலதிக அடிப்படைவசதிகள்; 2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவ் வேலைத்திட்டத்தினை மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 05 பெப்ரவரி 2017 அன்று நடைபெற்றது. இதில்  முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மக்களிடம் இத்திட்டத்தினை கையளித்தார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர் திரு.பிரசாத் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் முதலமைச்சரின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளுராட்சி ஆணையாளர், அமைச்சின் பிரதம கணக்காளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், காங்கேசன்துறை பிரதேசத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

  width=500

 width=500

 width=500

 width=500

 width=500