முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

திருவடிநிலை மத சுற்றுலா தலத்திற்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூ.2.95 மில்லியன் செலவில் முதலமச்சரின் அமைச்சின் சுற்றுலாத் துறையின் கீழ் திருவடிநிலை மத சுற்றுலா தலத்திற்கான அடிப்படை வசதிகள் 2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவ் வேலைத்திட்டத்தினை மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 05 பெப்ரவரி 2017 அன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நீதயரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மக்களிடம் இத்திட்டத்தினை கையளித்தார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி  நிகழ்வில் மதகுரு அவர்களும், வடமாகாண சபையின் உறுப்பினர்கள், வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளுராட்சி ஆணையாளர், அமைச்சின் பிரதம கணக்காளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வடமாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் திரு ரங்கராஜா, பேராசிரியை நாச்சியார், பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

 width=500

 width=500

 width=500

 width=500