உள்ளூராட்சி அமைச்சு

வட்டுக்கோட்டை முதலி கோயிலடி நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூ.1.00 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை முதலி கோயிலடி நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 05 பெப்ரவரி 2017 அன்று நடைபெற்றது.

இதில் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மக்களிடம் இத்திட்டத்தினை கையளித்தார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி  நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், ஆகியோரும் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முதலமைச்சரின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளுராட்சி ஆணையாளர், அமைச்சின் பிரதம கணக்காளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500