செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் இணையம் மூலம் வாகன வரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் சேவையை ஆரம்பித்து வைத்தார்

இலங்கையை இணையம் மூலம் இணைக்கும் ICTAயின் இலங்கையின் இலத்திரனியல் செயல்திட்டத்தின் கீழ் (e Srilanka) இதுவரை பல விடயதானங்கள் இணைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டு வரும் இந்த வேளையில் இதுவரை இலங்கையில்  08 மாகாணங்களிலும் இணையம் மூலம் வாகன வருமான வரிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயல்த்திட்டம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலமாக வடக்கின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் குறித்த இணையம் மூலமான சேவையினை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் வைபவம் 23 ஜனவரி 2017 அன்று யாழ் நூலக மாநாடு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த அங்குரார்ப்பண நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததோடு இணையம் மூலமான முதலாவது வாகன வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கியும் வைத்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா, வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், முதலமைச்சரின் செயலாளர் ஐஊவுயு திணைக்கள பணிப்பாளர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர், அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.