உள்ளூராட்சி அமைச்சு

பாரம்பரிய உணவு நிலையம் ஓமந்தையில் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின்கீழ் 2.93 மில்லியன் செலவில் ஓமந்தையில் அமைக்கப்பட்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 03 பெப்ரவரி 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராடசி ஆணையாளர், அமைச்சின் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பொறியியலாளர், வவுனியா மாவட்ட உளளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 width=500

 width=500

 width=500

 width=500