உள்ளூராட்சி அமைச்சு

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின்; நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 13.29  மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை அலுவலகக் கட்டடம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 03 பெப்ரவரி 2017 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர், அமைச்சின் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், வவுனியா மாவட்ட உளளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 width=500

 width=500

 width=500

 width=500