செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரிய உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன

549 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 480 ஆசிரிய உதவியாளர்களுக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வு 13 மார்ச் 2017 அன்று யாஃஇந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ், குடியியல், விவசாயம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், ஆலோசனை வழிகாட்டலும், ஊடகக் கற்கை ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் நேர்முகத்தேர்வும் செய்முறைப் பரீட்சையும் 2017 ஜனவரி 16 ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 480 ஆசிரிய உதவியாளர்களுக்கும் நியமனங்களை பெற்றுக் கொண்டார்கள்.

வட மகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வட  மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா, வட மாகாண சபை உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி.ரூ. வரதலிங்கம், கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.