முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

வருமானப் பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது

வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகளில் காணப்பட்ட வருமானப் பரிசோதகர் தரம் III இற்கான ஐந்து வெற்றிடங்களை நிரப்புவதற்காக முன்னர் வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று முதலமச்சரின் அமைச்சில் நடைபெற்றது.

இதில் 4 பேரிற்கான நியமனக் கடிதங்களை வடமாகாண மாண்புமிகு முதலமைச்சர் நீதயரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு.ஜோ.லோறன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500