விவசாய அமைச்சு

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 8வது அமர்வு மன்னாரில் நடைபெற்றது

வடமாகாண வீதிப் பயணிகள்  போக்குவரத்து அதிகார சபையின் 8ஆவது அமர்வு 28 ஏப்ரல் 2017 அன்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் தலைமையில் கௌரவ உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மன்னாரில் நடைபெற்றது.

குறித்த அமர்வில் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்துகளுக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்வதற்கான குழு நியமித்தல் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும்  முச்சக்கர வண்டிகளை அதிகார சபையின் கீழ் பதிவு செய்வதற்கான ஒழுங்கு விதிகளை தயாரித்தல் தொடர்பான நடவடிக்கைகள் என்பன கலந்துரையாடப்பட்டன.

குறித்த அமர்வில் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், அதிகார சபையின்  தலைவர் அ.நீக்கொலஸ்பிள்ளை, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கு.பிரபாகரமூர்த்தி, சட்ட வழக்கறிஞர் இ.கயஸ்பெல்டானோ, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வி.வி இந்திரஜித்,  மாகாண உள்ளூராட்சி  ஆணையாளர், எம்.பற்றிக் டிறஞ்சன்,நடவடிக்கை இயக்குனர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பி.எம்.இப்திகார், வடக்கு பிரதம பிராந்திய முகாமையாளர், இலங்கை போக்குவரத்து சபை உபாலி கிருபத்தொடுவ, இயந்திர பொறியியலாளர் வீதி அபிவிருத்தி திணைக்களம் எம்.ரவீந்திரன் குரூஸ், தலைவர் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியம் சி.சிவபரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.