விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரால் பாடசாலை மைதான புனரமைப்பிற்கு ரூபா.5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது

மன்னார் பாலையடிப்புதுக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தனது அமைச்சின் நிதியில் இருந்து இப்பாடசாலையின் மைதான புனரமைப்பிற்காக ரூபா.5  இலட்சம்  ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் சிறந்த பலனைப் பெற வேண்டுமானால் அனைவரதும் ஒத்துழைப்பு தேவை எனவும் குறிப்பிட்டார்.