விவசாய அமைச்சு

மன்னார் நகர முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழுத் தெரிவு இடம்பெற்றது

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களது சங்கத்தின் புதிய நிர்வாகக்குழுத் தெரிவிற்கான பொதுக் கூட்டம் மன்னார் நகர மண்டத்தில் 15 மே 2017 அன்று நடைபெற்றது.

குறித்த கூட்டத்தை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். மேலும் இப்பொதுக் கூட்டத்திற்க்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அ.நீக்கொலஸ்பிள்ளை அவர்களும் மன்னார் நகரசபையின் செயலாளர் சேவியர். பிரிட்டோ லெம்பேட் மற்றும் உப பொலிஸ் அதிகாரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

இங்கு அமைச்சர் உரையாற்றுகையில் எதிர்காலங்களில் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறாமல் அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்  எனத் தெரிவித்தார். அத்துடன் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகமானது 02 ஆண்டுகள் பதவியில் இருக்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டது.