உள்ளூராட்சி அமைச்சு

கிராஞ்சி நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி  ரூபா 9.13 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பூநகரி பிரதேச சபையின் கிராஞ்சி நீர் வழங்கல் திட்டம்  முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 27 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், பிரதேசசபையின் செயலாளர் மு.இராஜகோபால் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 width=500

 width=500

 width=500