உள்ளூராட்சி அமைச்சு

இயக்கச்சியில் சந்தை மற்றும் கடைத்தொகுதி என்பன திறந்து வைக்கப்பட்டன

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 11.43 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கடைத் தொகுதி வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 27 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக  சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மற்றும் ப. அரியரட்ணம், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், பிரதேசசபையின் செயலாளர் திருமதி.மோ.அருள்ஜோதி மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 width=500

 width=500