உள்ளூராட்சி அமைச்சு

சிவநகரில் பொது நூலகம் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு சிவநகரில் புதிதாக அமைக்கப்பட்ட பொது நுர்லகமானது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 09 யூன் 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நூலகமானது உலகவங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதியுதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா.5.94 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டது.

இத்திறப்பு விழா நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான து.ரவிகரன், அ.புவனேஸ்வரன் மற்றும் க.சிவநேசன் ஆகியோரும் உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி.மு.சுலோச்சனா, நெல்சிப் திட்டப் பொறியியலாளர் சி.மயூரன், உள்ளூராட்சித் திணைக்களப் பொறியியலாளர் ஆர்.சுரேஸ்குமார், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ந.ஜெயராஜ் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 width=500

 width=500

 width=500

 width=500