உள்ளூராட்சி அமைச்சு

தண்ணீரூற்றுப் பொதுச் சந்தை திறந்து வைக்கப்பட்டது

தண்ணீரூற்றுப் பொதுச்சந்தையானது மக்கள் பாவனைக்காக முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 09 யூன் 2017 அன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 

இப்பொதுச் சந்தையானது உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் நிதியுதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா10.15 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உதவித் தவிசாளர் வ.கமலேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான து.ரவிகரன், அ.புவனேஸ்வரன் மற்றும் க.சிவநேசன் ஆகியோரும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி.மு.சுலோச்சனா, நெல்சிப் திட்டப் பொறியியலாளர் சி.மயூரன், உள்ளூராட்சித் திணைக்களப் பொறியியலாளர் ஆர்.சுரேஸ்குமார், கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சீ.சபேசன் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500