உள்ளூராட்சி அமைச்சு

முல்லைக் கடற்கரை பொதுமக்கள் பாவனைக்காக புனரமைக்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் சுற்றுலா துறையின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதி ரூபா 3.6 மில்லியன் செலவில் அழகுபடுத்தப்பட்ட கரைத்துறைப்பற்றுப் பிரதேசசபையின்  முல்லை கடற்கரை 09 யூன் 2017 அன்று முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உதவித் தவிசாளர் வ.கமலேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான து.ரவிகரன், அ.புவனேஸ்வரன் மற்றும் க.சிவநேசன் ஆகியோரும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன்,  முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி.மு.சுலோச்சனா, நெல்சிப் திட்டப் பொறியியலாளர் சி.மயூரன், உள்ளூராட்சித் திணைக்களப் பொறியியலாளர் ஆர்.சுரேஸ்குமார், கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சீ.சபேசன் மற்றும் உத்தியோகத்தர்கள்> பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 

 width=500

 width=500