பிரதம செயலாளர் செயலகம்

பின்தங்கிய பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி திட்டத்திற்கான (LRDP) உலக வங்கியின் குழுவினருடனான கலந்துரையாடல்

சிரேஸ்ட நகர அபிவிருத்தி நிபுணர் யாரிஸ்சா லுங்க்டோ சம்மர் தலைமையில் பின்தங்கிய பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி திட்டத்திற்கான (LRDP) உலக வங்கியின் திட்ட இனங்காணல் பணிக் குழுவினர் 19 யூன் 2017 ஆம் திகதி  அன்று பிரதம செயலாளர் செயலகத்திற்கு விஜயம் செய்து பிரதம செயலாளர் மற்றும் தொடர்புடைய மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

எஸ்.மனோகரன் சிரேஸ்ட கிராம அபிவிருத்தி நிபுணர் / செயற்க்குழு தலைவர், ஜெசிகா ஸ்கிமிட் - நகர அபிவிருத்தி நிபுணர், பாலக்கிருஷ் மேனன் - முன்னணி நகர்ப்புற விசேட நிபுணர் மற்றும் ஜி.விக்கிரமசிங்க மற்றும் எஸ். குகநந்தன் - ஆலோசகர் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதான செயலாளரின் தலைமையில் பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பணிப்பாளர் - திட்டமிடல்  ஆகியோருடன் பிரதம செயலாளர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஒரு சிறிய கூட்டம் நடைபெற்றது.

பின்தங்கிய பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி திட்டத்திற்கான (LRDP) இலக்குகள்,  திட்ட இனங்காணல் மற்றும் தயாரித்தல் செயன்முறைகள் தொடர்பாக முதன்மை முகவர்கள்,  மத்திய மாகாண மற்றும் உள்ளுராட்சி  அதிகாரிகளுடன் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான கருப்பொருள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன் திட்ட வடிவமைப்பு, அமுலாக்கம் மற்றும் நிறுவன கட்டமைப்பு தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்டப்பட்டது.