உள்ளூராட்சி அமைச்சு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் முதலமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடினார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து அவர்கள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை 29 யூன் 2017 அன்று முதலமைச்சர் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார். 

இதன் போது உயர்ஸ்தானிகர் அவர்கள் வடக்கு மாகாணத்தின் பொருளாதார தேவைகள் தொடர்பாக விரிவாகக் கேட்டறிந்ததுடன் பொருளாதார அபிவிருத்திக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்தார். மேலும் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான திட்ட வரைபுகள் ஏதும் இருந்தால் தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண மகளிர் விவகார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் திருமதி. அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.