முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

மாந்தை கிழக்கு பிரதேசசபையின் அலுவலகக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 17.71 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அலுவலக கட்டடம் வடமாகாண முதலமைச்சர் அவர்களின் சார்பில் கலந்துகொண்ட வடமாகாண சபையின் மகளிர் விவகார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் திருமதி.அனந்தி சசிதரன் அவர்களால் 04 யூலை 2017 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

மாந்தை கிழக்குப் பிரதேச சபையின் செயலாளர் பா.சிவபாலராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம், உள்ளுராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி.மு.சுலோசனா, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500