மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம்

பணிக்கூற்று

வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் குறிக்கோளானது நீடித்திருக்ககூடிய நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தியும் வெள்ளத்தடுப்பினையும், கழிவு வாய்க்கால்களையும், உப்புநீர் தடுப்பு அணைகளையும் புனரமைத்தும், மாகாணத்திலுள்ள ஆற்று நீர் படுக்கைகளைப் பராமரித்தும் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தல்.

 

பிரதான தொழிற்பாடுகள்

 ·         நீர்ப்பாசனம், கால்வாய் வெள்ளத்தடுப்பு மற்றும் உவர்நீர்தடுப்பு போன்றவற்றில் நிலைத்து நிற்கக்கூடிய வசதிகளை வழங்குவதில் நீர்ப்பாசன உத்தியோகத்தர்களின் உதவிகளைக் காலத்திற்கு காலம் நிச்சயப்படுத்துதல்.

 ·         உயர்வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் ஊக்குவிப்பு விவசாயத்தில் விளைச்சலின் தன்மையை மாற்றுதல்/மாற்றியமைத்தல்.

 ·         புதிய பொருத்தமான நீர்சேமிப்பு தொழில்நுட்பத்தைத் தெரிவு செய்து பின்பற்றுதல்.

 ·         நிலக்கீழ் நீரினை மீள் நிரப்பும் வீதத்தை அதிகரித்தல்.

 ·         விவசாயத்துக்குப் பயன்படும் நிலக்கீழ் நீரின் நுகர்வைச் சீர்படுத்தல்.

 ·         நீர்விரயமாதல், கடல் நீர் உட்புகுதல், நீர்மாசடைதல் போன்றவற்றிலிருந்து நிலக்கீழ் நீர் வளத்தினைப் பாதுகாத்தல்.

 ·         தற்போது செயற்பாட்டினுள்ள திட்டங்களை அதன் வடிவமைப்பிற்குரிய செயல்திறன் மட்டத்தில் செயற்படுத்துவதற்கான இயங்கு நிலையை முன்னேற்றுதல்.

 ·         நீர்ப்பாசனம், கால்வாய் அமைப்பு, வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் உவர்நீர் தடுப்பு திட்டங்களில் இருக்கின்ற நிலைமையை அதற்கென வடிவமைக்கப்பட்ட செயல்திறன் மட்டத்தில் செயற்படுத்தற்கேற்ற வகையில் முன்னேற்றுதல்.

 ·         இயங்கு நிலையிலுள்ள திட்டங்களை அதன் உரிய வடிவமைப்பு செயல்திறன் மட்டத்தில் இயங்கச்செய்யும் வகையில் உரிய வேலைச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல்.

 ·         நீர்ப்பாசனம், கால்வாய் அமைப்பு, வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் உவர்நீர் தடுப்பு திட்டங்களின் வசதிகளை இலகுவில் அடையக்கூடிய வகையில் வழிவகைகளை ஏற்படுத்துதல்.

 ·         விவசாய நோக்கம், தேவைப்பாடுகள் ஏனைய துறைகளுக்கிடையில் நீர்வளத்தை பங்கிடும் வகையில் நீர்வளத்தினை விருத்தி செய்தல்.

 ·         வெள்ளத்தினால் பாதிக்கக்கூடிய தாழ் நிலப்பிரதேசங்களை விவசாயத்துறைக்கும் தேவைப்பாடுடைய மற்றைய துறைகளுக்கும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் தகுதியாக்குதல்.

 ·         விவசாய துறைக்கும் மற்றும் ஏனைய துறைக்கும் பங்களிக்கும் வகையில் தாழ் நிலத்தரையை வெள்ளத்திலிருந்து பாதுகாத்தல்.

 ·         விவசாயத்துறைக்கும் மற்றும் ஏனைய துறைக்கும் பங்களிக்கும் வகையில் உவர் நீர் புகுந்த தாழ் நில படுகை பகுதிகளை பயிச்செய்கை மேற்கொள்ளத்தக்க வகையில் தகுதிப்படுத்தல்.

 ·         நீர்ப்பாசன திணைக்களத்தில் நடைமுறைப்படுத்தும் திறனை விருத்தி செய்தல்.

 ·         நீர்ப்பாசன திட்டத்தில் பங்குபற்றும் முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பொறுப்புக்களையும், அதிகாரங்களையும் பயனாளிகளுக்கு (கமக்கார அமைப்பு) வழங்குதல்.

 ·         விவசாய அமைப்புக்களின் செயற்பாடுகளில் வழிகாட்டுதலையும் கண்காணிப்பினையும் மேற்கொள்ளல்.

 ·         தற்போது இருக்கின்ற இடைவெளிகளை பூர்த்தி செய்யும் வகையில் விவசாய நிறுவனங்களின் உயர்வுக்கு ஏற்ற வகையில் தேவையான அறிவினையும், திறனையும் உயர்த்துதல்.

 ·         விவசாயத்திற்கான நீர்ப்பயன்பாட்டிற்கு உரிய வரியை விதித்தல்.

 ·         உரிய உற்சாகமூட்டலின் மூலம் பணியாளர்களை ஊக்குவித்தல்.

 ·         வினைத்திறமை, தனித்துவம், கணக்களிதன்மை ஆகியவற்றை நிச்சயப்படுத்திக் கொள்ளுதல்.

 ·         குடியியல்சார் வேலைத்திட்டங்களில் தரத்தையும் நியமத்தையும் பேணுதல்ஃஉறுதிசெய்தல்