முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கீழ் காணப்படுகின்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்காக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் அதன்பின்னர் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை என்பவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 56 பேருக்கான நியமன கடிதம் 26 யூலை 2017 அன்று கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பிராந்திய கால்நடை அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.வாகீசன்,  முதலமைச்சரின் அமைச்சின் உதவிச் செயலாளர் பொ.ஸ்ரீவர்ணன், நிர்வாக உத்தியோகத்தர் ஜோ.லோறன்ஸ், ஐந்து மாவட்டங்களின் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சித் தரத்தில் நியமிக்கப்பட்டவர்கள் இரண்டு வருட கால விலங்கு பரிபாலனம் சம்பந்தமான கற்கை நெறியில் டிப்ளோமா பாடநெறியினை நிறைவு செய்த பின்னர் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III இற்கு நியமிக்கப்படுவார்கள்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500