சுகாதார அமைச்சு

வட மாகாணத்திற்கான ஓட்டிசம் கொள்கை வரைபின் வெளியீட்டு நிகழ்வு

வடமாகாணத்தில் ஓட்டிசம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட மூளை மற்றும் நரம்புமண்டலத்தின் தொழிற்பாடுகளில் வித்தியாசங்களையுடைய சிறுவர்களை இனங்காணல், மதிப்பீடு செய்தல், பொருத்தமான சிகிச்சைகள் மற்றும் இடையீடுகளை வழங்குதல், கல்வியூட்டுதல், தேவையான பயிற்சிகளை வழங்குதல், சமூகத்தில் இணைந்து வாழுதல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதான ஓட்டிசம் கொள்கை வரைபின் வெளியீடானது 19 யூலை 2017 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது.

வடமாகாண சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து 'ஓட்டிசம் கொள்கை 2017-2022' என்பதன் வரைபை வெளியீட்டு வைத்தன.  இக் கொள்கை வரைபின் முதற் பிரதியினை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்விலே வடமாகாணத்தின் சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் என்பவர்களோடு, ஓட்டிசம் நிலைமையுடன் பணியாற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பெற்றோர்கள், தன்னார்வத் தொண்டர்கள், 'செரண்டிப்' சிறுவர் இல்லத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500